fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட விபரீதம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 15:25

உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட விபரீதம்

உணவு ஒவ்வாமையினால் ஹட்டன் பகுதியில் 65 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு ஒவ்வாமை குறித்து பொலிஸாரும் பொது சுகாதார பரிசேதகர்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட்டவல டெம்பல்ஸ்டோ தோட்ட பகுதியில் சமய வழிபாட்டு ஸ்தலம் ஒன்றிலிருந்து வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் சிறுவர்கள், வாந்தி உள்ளிட்ட நோய் தாக்கங்களுக்குட்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 65 சிறுவர்கள் வட்டவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கவலைக்கிடமாக உள்ள ஒரு சில சிறுவர்கள் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்க மாற்றப்பட்டனர். பதினேழு சிறுவர்கள்வட்டவல வைத்தியசாலையிலும் 3 சிறுவர்கள் நாவலப்பிட்டிய வைத்தியசாலையிலும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தோட்டத்திலுள்ள சமய வழிபாட்டு ஸ்தாலத்தினால் பாடசாலை மாணவர்கள் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இவர்களுக்கு இந்த சமய வழிபாட்டு ஸ்தலத்தினால் உணவு வழங்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 15:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க