உணவு ஒவ்வாமை காரணமாக 65 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Related Articles
உணவு ஒவ்வாமை காரணமாக 65 சிறுவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெம்பல்ஸ்டோ பிரிவில் வசிக்கும் 3 வயது முதல் 10 வயது வரையான சிறுவர்கள் அதில் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அரச சார்பற்ற அமைப்பொன்றினால் நடத்திச்செல்லப்படும் செயற்திட்டமொன்றினூடாக குறித்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உணவை உட்கொண்ட சிறுவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குக்கு உள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சனத் பெரேரா தெரிவித்தார்.