fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 12:29

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.

 

வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மேலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக கடந்த 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.08 அளவில் இரத்மலானை, பரக்கடுவ, மடஹின்ன, பண்டாரவளை, ஹிங்குருகடுவ மற்றும் எதிமலே ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் .

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க