கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமிடத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கடமையில் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதுதொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரச எதிர்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடுமாயின் அதனுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவேண்டுமென கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் சட்டநடவடிக்கை : பொலிசார்
படிக்க 0 நிமிடங்கள்