2016ம் ஆண்டு நிதியாண்டில் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளது. அரச கணக்காய்வு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 837 அரச நிறுவனங்களில் 101 நிறுவனங்கள் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு விருது
படிக்க 0 நிமிடங்கள்