தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று முல்லைத்தீவு, காலி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 3 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட ஒத்திகை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமாரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று குறித்த பகுதிகளில் கரையோரங்களில் வாழும் மக்களை வெளியேற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒத்திகை நிகழ்வு தொடர்பில் அச்சம்கொள்ள தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று
படிக்க 1 நிமிடங்கள்