அமெரிக்காவின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. இதனால் புளோரிடா உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் காற்றையடுத்து கன மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 85 கிலோமீற்றர் எனும் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென புளோரிடா மாநில அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.