fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வியானா வாவி பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 17:35

வியானா வாவி பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி

பல உயிர்களை காவுகொண்ட மஹியங்கணை வியானா வாவியில் விழுவதை தடுக்கும் வகையில் 4 ஆயிரத்து 750 மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. கடந்த காலங்களில் வியான வாவியில் வாகனங்கள் வீழ்ந்ததால் பல உயிர்கள் பலியாகின. அத்துடன் மேலும் பலர் காயமடைந்தனர் இதனை தடுக்கும் வகையில் உடனடியாக பாதுகாப்பு வேலியை நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதற்கமைய பதுளை, மஹியங்கணை பிரதான வீதியின் லொக்கல ஓயாவின் இருமருங்கிலும் வியான வாவியின் இருமருங்கிலும் 52 மில்லியன் ரூபா செலவில் இரும்பு வேலி நிர்மாணிக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை நிர்மாணித்தது. பாதுகாப்பு வேலி நிர்மாணிக்கப்பட்டதையடுத்து இப்பகுதியின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 17:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க