இலங்கையின் பிரதான நகர அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் கையளிக்கப்படவுள்ளது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் 15ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு, திருகோணமலை, காலி, திஸ்ஸ மஹாராம, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வரையான நகரங்களில் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 13 பிரதான நகரங்கள் மூலோபாய நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதான நகர அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் டிசம்பர் கையளிப்பு
படிக்க 0 நிமிடங்கள்