பாடசாலை கல்வி பாடத்திட்டத்தில் கட்டாயம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கென தேசிய கல்வி நிறுவனத்திற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் சில செயற்பாடுகள் காரணமாக பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கிடையில் பரவியுள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை கண்டறிவதற்கான பொறுப்பு வலய கல்வி பணிப்பாளர்கள் முதல், பாடசாலை அதிபர்கள் வரையான அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.