கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11:55, 30.ஆக 2018

கொழும்பு-மாளிகாவத்தையில் இன்று காலை துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு ஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
ஆறுமுகம் தொண்டமான் செயலாளர் பதவியிலிருந்து நீங்கினார்

ஆறுமுகம் தொண்டமான் செயலாளர் பதவியிலிருந்து நீங்கினார் 0

🕔11:49, 30.ஆக 2018

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் பதவியிலிருந்து வந்த ஆறுமுகம் தொண்டமான் தனது பதவியிலிருந்து விலகினார்.அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து வந்த அவர் தலைமை பதவியில் மாத்திரம் தொடர்ந்தும் செயற்படவுள்ளார். இ.தொ.காங்கிஸின் பொதுச்செயலாளராக அனுஷியா சிவராஜூம், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமானும், உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
தாதியர் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ள வர்த்தமானி அறிவித்தல்

தாதியர் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ள வர்த்தமானி அறிவித்தல் 0

🕔10:55, 30.ஆக 2018

தாதியர் துணை மற்றும் இடைக்கால வைத்திய சேவையின் பயிற்சிக்கென பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இணையத்தள வாயிலாக அவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள், மொரட்டுவை பல்கலைக்கழகத்தினூடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Read Full Article
சிரிய யுத்தத்தில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு

சிரிய யுத்தத்தில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு 0

🕔10:51, 30.ஆக 2018

சிரிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் இட்லிப் நகரிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த பகுதியிலுள்ள மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு

Read Full Article
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு 0

🕔10:46, 30.ஆக 2018

நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானி பிரதேசத்திலுள்ள குளமொன்றில் நால்வர் படகில் சென்றுள்ளனர். இதன்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் இ ருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவர் பிரதேசவாசிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Read Full Article
உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி 0

🕔10:40, 30.ஆக 2018

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் தெஹ்ரி மாவட்டத்தின் கோட் கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்

Read Full Article
ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது 0

🕔10:23, 30.ஆக 2018

ராஜ்கபூரால் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ

Read Full Article
சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை 0

🕔09:55, 30.ஆக 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் தேடுபொறி ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன. அவர்களின் அறிவிப்புக்களில் பக்கச்சார்பான கருத்துக்கள் உள்ளடக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மக்களிடம் பல்வேறு கருத்துக்களை பரப்பி பிரபல்யமாக முயற்சிக்கின்றனர். எவ்வாறெனினும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப்

Read Full Article
கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று 0

🕔06:49, 30.ஆக 2018

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கென அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ‘உலகளாவிய தடங்கல்களை கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் இன்று மற்றும் நாளை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாநாடு இடம்பெறும். இம்மாநாட்டில் பங்கேற்பதை 57 நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிசெய்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக், நோர்வே உள்ளிட்ட நாடுகள் அதில் உள்ளடங்குகின்றன. குறித்த இரண்டு நாட்களும்

Read Full Article
பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம் 0

🕔06:46, 30.ஆக 2018

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேபாளம் நோக்கி பயணித்துள்ளார். பிம்ஸ்டெக் மாநாடு இன்று, நாளையும்  நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டின்போது பிம்ஸ்டெக்கின் தலைமைப்பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடான பிம்ஸ்டெக் மாநாடு நான்காவது முறையாக இடம்பெறுகிறது. இலங்கை, மியன்மார், இந்தியா,

Read Full Article

Default