பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சகல அரச தலைவர்களும் பங்குபற்றிய சிநேகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது. காத்மண்டு நகரிலுள்ள Crown plaza ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்றது. நேபாள பிரதமரும் அவரது பாரியாரும் சந்திப்பில் கலந்துகொண்ட அரச தலைவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியன்மார் ஜனாதிபதி Win Myint, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த சந்திப்பின்போது சகல அரச தலைவர்களும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

பிம்ஸ்டெக் – அரச தலைவர்கள் கலந்துகொண்ட சிநேகபூர்வ சந்திப்பு
படிக்க 0 நிமிடங்கள்