fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 12:10

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டை சரியான திசைக்கு இட்டுச்செல்ல ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் முடியுமென வலய அரச தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்தே ஜனாதிபதி தொடர்பில் பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். நேபாளம் காத்மண்டு நகரில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்ட அரச தலைவர்கள் பலருடன் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டமை, இலங்கை, அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியாக பெற்ற வெற்றியாகும்.

நீண்ட அரசியல் அனுபவமுடைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டமைப்புக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடியவரென ஏனைய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிம்ஸ்டெக் வலயத்தை சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க வலயமாக மாற்றியமைக்கும் பணிகளிலும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஈடுபடுவாரென உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க