fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:58

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரியாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென விஜயம் இரத்து செய்துள்ளார். இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாரம் வடகொரியா பயணிக்கவிருந்தார். சிங்கப்பூர் பேச்சுவார்த்தையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை காரணமாகவே ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயத்தை ரத்து செய்துள்ளார். அணுவாயுதங்கள் கலையப்படுமென வடகொரிய தலைவர் வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும் அணுவாயுத செயற்பாடுகளை கைவிடும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருதுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை சீனாவின் அழுத்தம் காரணமாகவே வடகொரியாவின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க