fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:09

இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள்..

இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். பிரதானமாக நிவித்திகலை பிரதேச செயலகப்பிரிவில் 232 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குருவிட்ட செயலகப் பிரிவில் டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எகலியகொடை பகுதியில் 161 டெங்கு நோயாளிகளும் எலபாத்த பகுதியில் 159 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நகர பகுதியில் 124 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 139 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நாடு முழுவதிலுமுள்ள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில் டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க