வாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம்
Related Articles
வாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்வரும் வியாழக்கிழமை வரை காலஅவகாசம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், உள்ளுராட்சி நிறுவனம் மற்றும் கிராம சேவை அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியற்ற நபர்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பின் அது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிடவும் சந்தர்ப்பம் காணப்படுகிறது. எவரது பெயரேனும் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படவில்லையெனில் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.