fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 13:56

கொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது

கொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவினர், பியகம பகுதியில் வைத்து அவரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தம்பாவில மல்வான பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரென தெரியவந்துள்ளது. அவர் கடவத்தை எம்ஸ்டோன் சந்தியில் வைத்து யுவதியொருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வதற்கென வருகைத்தந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 13:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க