பூகோள பாதுகாப்பின் சவால்களை வெற்றி கொள்ளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாதது-ஜனாதிபதி
Related Articles
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு இடம்பெறுகின்றது. நேபாளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒளிபதிவு செய்யப்பட்ட உரையொன்றும் இம்மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.
உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கொழும்பு பாதுகாப்பு மாநர்டு இன்று முற்பகல் ஆரம்பமானது. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் இம்மாநாட்டில் பாதுகாப்புடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது. உள்நாட்டு பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அரசாங்கத்தின் இருப்பு ஜனநாயக பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் என்பன ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாததாகும். ஆகவே இப்பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான சவால்களின் போது, இம்மாநாட்டை நானொரு இன்றியமையாத விடயமாக கருதுகின்றேன். எமது நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கம், அபிவிருத்தி ஏற்பட்டது. தற்போது எமது நாடு மிகவும் வேகமாக மு:ன்னேறி வருகின்றது. இதில் எமது பாதுகாப்பு படையினர் காட்டி வரும் அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கின்றேன். இப்பாதுகாப்பு மாநாட்டில் யுத்த தந்திரோபாயங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கும் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கும் அப்பிரச்சினைகளை உள்நாட்டிலிருந்து வெளியே செல்லவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உரை இடம்பெற்றது.
சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் முழு உலகமும் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்களின் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் இயற்கை அனர்த்தங்களினாலும் ஒரு நாட்டுக்கு அழுத்தங்கள்ஏற்படலாம். ஒரு நாடு என்ற வகையில் நாம் இதற்:கு தயாராக வேண்டும். அதற்கு பயிற்சிகள் அவசியம். அதற்கான அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எதிர்கால பாதுகாப்பு சவால்களை வெற்றி கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும். அதன் மூலம் அமைதியான ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.