fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2018 13:00

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதற்கட்ட கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை போன்று உலகில் வாழும் சகல மக்களும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு உருவாக்கப்படும் சுற்றாடலுக்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். நாடொன்றில் பாதுகாப்பு வலுவற்று போகும் நிலையில் அந்நாட்டில் நிலைத்தன்மை நீடிக்காது. அரசாங்கத்தின் நிலைபேறு, ஜனநாயக சமுதாயம், மக்களின் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியன சகல நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கமைய குறித்த மாநாட்டின் தொனிப்பொருளான ‘உலகளாவிய தடங்கல்களை கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு’ என்பது காலத்திற்கு பொருத்தமானதென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 8வது தடவையாக இம்முறை நடைபெறும் குறித்த செயலமர்வில் சர்வதேச பாதுகாப்பு துறை சார் நிபுணர்கள் 13 பேர் மற்றும் உள்நாட்டு வளவாளர்கள் 14 பேரின் பங்குபற்றுதலுடன், 44 நாடுகளின் 800க்கும் மேற்ப்பட்ட பிரதிநிதிகள் செயலமர்வில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயலமர்வை ஆரம்பித்து வைத்து பிரதான உரையாற்றினார். நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான தடைகளுக்கு எதிராக இணைந்த பொறிமுறையொன்றை ஏற்படுத்துதல், துறைசார் நிபுணத்துவ கலந்துரையாடல்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய காரணங்களை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு செயமலர்வு இடம்பெறுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2018 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க