சிரிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் இட்லிப் நகரிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த பகுதியிலுள்ள மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

சிரிய யுத்தத்தில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு
படிக்க 0 நிமிடங்கள்