ராஜ்கபூரால் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ அதன்பிறகு படப்பிடிப்புகள் நடப்பது குறைந்து போனது. ஸ்டூடியோவை மீண்டும் சரிசெய்ய கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை விற்றுவிட கபூர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்த ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகை கரீனா கபூருக்கு வேதனையை அத்துடன் அந்த ஸ்டூடியோவுக்குள் சிறுவயதில் நான் விளையாடிய நினைவுகள் இன்னும் மனதில் இருக்கிறது எனவும் அது தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது
படிக்க 1 நிமிடங்கள்