அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் தேடுபொறி ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன. அவர்களின் அறிவிப்புக்களில் பக்கச்சார்பான கருத்துக்கள் உள்ளடக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மக்களிடம் பல்வேறு கருத்துக்களை பரப்பி பிரபல்யமாக முயற்சிக்கின்றனர். எவ்வாறெனினும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தமக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லையென டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு கூகுள் நிறுவனம் பதில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்