கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கென அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ‘உலகளாவிய தடங்கல்களை கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் இன்று மற்றும் நாளை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாநாடு இடம்பெறும். இம்மாநாட்டில் பங்கேற்பதை 57 நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிசெய்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக், நோர்வே உள்ளிட்ட நாடுகள் அதில் உள்ளடங்குகின்றன. குறித்த இரண்டு நாட்களும் பல்வேறு உப தொனிப்பொருள்களின் கீழ் விசேட நிபுணர்கள் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று
படிக்க 0 நிமிடங்கள்