பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேபாளம் நோக்கி பயணித்துள்ளார். பிம்ஸ்டெக் மாநாடு இன்று, நாளையும் நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டின்போது பிம்ஸ்டெக்கின் தலைமைப்பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடான பிம்ஸ்டெக் மாநாடு நான்காவது முறையாக இடம்பெறுகிறது. இலங்கை, மியன்மார், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், தாய்லாந்து, பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தமது தூதுக்குழுவினருடன் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.