fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

18வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10ம் நாள் இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 14:59

18வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10ம் நாள் இன்றாகும்

18வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10ம் நாள் இன்றாகும். இன்றையதினம் இலங்கை வீர, வீராங்கணைகள் முதற்கட்ட போட்டிகள் மற்றும் சில இறுதிப்போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். இதேவேளை நேற்று இரவு ஆண்களுக்கான 800 மீற்றர் முதற்கட்ட ஓட்டப்போட்டி நடைபெற்றது. முதலாவது போட்டியில் இந்துனில் ஹேரத் இலங்கை சார்பில் கலந்துகொண்டார். போட்டி தூரத்தை ஒரு நிமிடம் 47.54 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். அதற்கமைய இந்துனில் ஹேரத் இன்று நடைபெறவுள்ள ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றார்.

அதேபோல் நேற்று இரவு இடம்பெற்ற பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க 6ம் இடத்தை பெற்றுக்கொண்டார். முதல் மூன்று சுற்றுக்களில் அவர் முன்னிலைபெற்ற போதிலும் இறுதியில் 6ம் நிலையிலேயே போட்டியை நிறைவுசெய்ததாக இந்தோனேஷியாவிலுள்ள எமது விசேட பிரதிநிதி சதுக திவாஷன தெரிவித்தார். இதேவேளை இன்றையதினம் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கயந்திகா அபேரத்ன போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியின் முதற்கட்ட போட்டிகள் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 14:59

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க