fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை-அமைச்சர் பைசர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 14:21

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை-அமைச்சர் பைசர்

தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் தேசிய பட்டியலில் மிதிபலகையில் தொங்கினர். பின்னர் தமது இனத்தவருக்கு வாக்களிக்குமாறு கூறி விருப்பு வாக்குகளை சேகரித்து கொள்கின்றர். பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்கின்றனர். இந்த முறைக்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சிலர் இவற்றை மூடிமறைத்து எல்லை நிர்ணய முறையை தவறு என கூறி பழைய முறைக்கு செல்ல வேண்டுமென கூறுகின்றன. பழைய முறையை புதிய முறையுடன் ஒப்பிடுகையில் அந்த இரு முறைகளிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமனானது. எமது மேன்முறையீடுகளை முன்வைத்து மக்களின் முறையீடுகளையும் கேட்டு இந்த முறையை சீர்செய்ய முடியும். ஜனநாயக முறைக்கு நாம் செல்வதாக இருந்தால் இந்த முறையில் உள்ள குறைப்பாடுகளை தவிர்த்து முன்னேற வேண்டும். அது எமது பொறுப்பாகும். இந்த தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளார். தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் வரலற்றில் மிக அமைதியான தேர்தல் ஆகும். விருப்பு வாக்கு முறையில் இருந்து விடுப்பட்டமையே இதற்கான காரணம் ஆகும். இந்த நாட்டு பெண்களுக்கு கிடைத்த 25 வீத பெண் பிரதிநிதித்துவத்தை தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக அணி திரளுமான நான் அனைத்து பெண்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 14:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க