ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்..
Related Articles
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள வலய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்காக கொண்ட 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி அங்கு பயணிக்கவுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நேபாளத்தின் காத்மண்டு நகரில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. வங்காள விரிகுடாவை அமைதி செழிப்பு மற்றும் நிரந்தர வலயமாக மாற்றல் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது. இதேவேளை மாநாட்டிற்கு இணைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.