ஒதுதொகை கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தள கொட்டிகம்போக்க காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வந்துள்ளனர். சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்