அமெரிக்க என்கரேஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
Related Articles
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான என்கரேஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நான்கு நாட்கள் பயிற்சி நடவடிக்கைக்கென குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படை, அமெரிக்க என்கரேஜ் கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்றதாக, கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் டெனிஸ் ஜெகோ உள்ளிட்ட அதிகாரிகள் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து, கிழக்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் எட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது முக்கிய பரஸ்பர விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. என்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை மெரின் படையணியுடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. பயிற்சியின் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை என்கரேஜ் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.