fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபிவிருத்தி திட்டங்களின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 18:25

அபிவிருத்தி திட்டங்களின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

வடமேல் மாகாண கால்வாய் அபிவிருத்தி திட்டத்தின் முறைகேடுகள் தொடர்பில் அறிவிப்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடியற்ற திட்டத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். 011-2034159 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் 011-2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட பிரிவினூடாக மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணைவாக இடம்பெறும் நடவடிக்கைகளின்போது ஏற்படக்கூடிய ஊழல் மோசடிகள் தொடர்பில் அறிவிக்க முடியுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 18:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க