fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 13:10

காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு பிணை

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு பிணை வழங்கி விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையை முன்னிட்டு அவர்கள் இன்றைய தினம் விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இதேவேளை பாரிய நிதி மோசடி வழக்கு விசாரணைகளுக்கான மூவரடங்கிய நீதிபதி குழாமை கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு இன்று இடம்பெற்றது. காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு விசாரணைகளே முதலாவது வழக்காக விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க