fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற காலநிலையால் ஹவாய் தீவில் பல்வேறு அனர்த்தங்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 12:22

சீரற்ற காலநிலையால் ஹவாய் தீவில் பல்வேறு அனர்த்தங்கள்

ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தாழ்நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மண்சரிவு அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பொது சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணித்தியாலத்திற்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹவாய் தீவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் நாட்களுக்கு நீடிக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2018 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க