தனியார் வைத்தியசாலைகளில் விலை கட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் இரு தினங்களுக்குள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஒப்படைக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ஆலோசனைக்கமைய குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 53 கட்டணங்களுக்கான விலைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன. தனியார் வைத்தியசாலைகளின் விலை கட்டுப்பாடு அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருமென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலை விலை கட்டுப்பட்டு இறுதி அறிக்கை
படிக்க 0 நிமிடங்கள்