fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர பரீட்சை முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 12:43

உயர்தர பரீட்சை முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம்

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன. 15 நகரங்களின், 37 மத்திய நிலையங்களில் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. முதல் கட்டத்தில் 28 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். மதிப்பீட்டு பணிகளுக்கென தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளை இன்று முதல் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை முழுமையாக மூட கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென செப்டெம்பர் மாதம் 6ம் திகதி மீள திறக்கப்படவுள்ளது. இதேவேளை மதிப்பீட்டு பணிகளுடன் உயர்தர பரீட்சை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மதிப்பீட்டு மத்திய நிலையங்கள் இயங்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க