ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவுக்கிடையில் பேச்சுவார்த்தை
Related Articles
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் சம்பள ஆணைக்குழுவுக்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. சகல அரச கட்டமைப்புக்களிலும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து, ஒரு புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். 15 பேரை கொண்ட சம்பள ஆணைக்குழுவில் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ்.ரணுக்கே தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.