சந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளை விரிவுப்படுத்தியது. குறித்த ஆயவில் வடதுருவத்தில் உள்ள பனி படிமங்கள் அடர்த்தியற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கமையவே சந்திராயன் – 1 விண்கலம் கண்டுப்பிடித்தது பனி படிமங்கள் தான் என நாசா உறுதிசெய்தது. எனவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.