சம்பள மீளாய்வு குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதியினால் குழு நியமனம்
Related Articles
அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வு குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதியினால் 15 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தல் நேற்று ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். பொதுநிர்வாகம், கல்வி மற்றும் சட்டத்துறைசார் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் குறித்த ஆணைக்குழுவில அங்கம் வகிப்பதாக தெரியவருகிறது.