fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2018 12:02

முஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில்

5 கடமைகளை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தில் 5 ஆவது கடமை ஹஜ்ஜாகும். இறைவனின் இல்லம் என அழைக்கப்படும் கஹ்பத்துல்லா அமைந்துள்ள புனித மக்கா நகருக்கு யாத்திரை சென்றே ஹஜ் கடமை நிறைவேற்றப்படும். இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதத்தில் கொண்டாடப்படுவது புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

தான் கண்ட கனவை , இறைவனின் உத்தரவாக ஏற்று, மகனை அறுத்துப் பலியிட இப்ராஹிம் நபி அவர்கள் முயன்றார்கள். கத்தி, மகனை அறுக்க மறுத்தது. இப்ராஹிம் நபி அவர்களை சோதிப்பதற்காகவே, இறைவன் இவ்வாறான கடனை அவருக்கு தோற்றுவித்தான். நபியின் தியாகத்தை பாராட்டி, மகனுக்கு பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஆட்டை இறக்கி, அறுத்து பலியிடுமாறு இறைவன் பணித்தான். இதனை நினைவுகூரும் முகமாகவே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்து இறைவனுக்காக தியாகம் செய்கின்றனர்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று காலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதும், பின்னர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரிப்பதும் இன்றைய தினத்தில் முஸ்லிம்கள் பின்பற்றும் நடைமுறையாகும். அல்லற்படும் மாந்தர்களின் குறை தீர்ப்பதும் இன்றைய நாளின் மற்றுமொரு செயற்பாடாகும். ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் எடுத்துக்காட்டாகவும், தியாகத்திற்கு உதாரணமாகவும் காணப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்….

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2018 12:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க