அனைத்து துறைகளிலும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-ராஜாங்க அமைச்சர் அஜித்
Related Articles
கடந்த 3 வருடங்களில் நாடு ஜனநாயக விழுமியங்களில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அஜீத் பீ பெரேரா தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது பேருவலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சமில ரணசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயமடைந்த சமில ரணசிங ;க இதுவரை பூரண சுகமடையவில்லை. அவரது இல்லத்திற்கு விஜயம் செய்த ராஜாங்க அமைச்சர் அஜீத் பீ பெரேரா சமில ரணசிங்கவிடம் நலன் விசாரித்ததுடன் அவரது வீ’ட்டிற்கு சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கட்டமைப்பையும் வழங்கினார்.
அப்போதை விட இப்போது சிறந்தது. இந்நாட்டு மக்களுக்கு அரசியல், ஊடகம், ஜனநாயகம், ஆகிய துறைகளில் சுதந்திரம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் பலர் வரலாற்றை மறந்து செயல்படுகின்றனர். அன்று சமில மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆயுதங்களை வழங்கியவர்கள், தற்போது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் போலி வீரர்களாக மாறியுள்ளனர். எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் நாங்கள் குறைகளை திருத்திக் கொண்டு ஜனநாயகத்திற்காக சமில போன்றவர்கள் செய்த தியாகத்தை நிதர்சனமாக்குவதற்கு நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.