இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் 3ஆவது போட்டி தற்பொழுது நொட்டிங்ஹம்மில் இடம்பெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதன்படி களமிறங்கிய இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. விராட் கோஹ்லி 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.எண்டர்சன் ப்ரோட் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டக்களை வீழ்த்தினர்.
தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 161 ஓட்டங்களை மாததிரமே பெற்றது.ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றார்.ஹர்திக்பாண்டியா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
தனது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய நேற்றை நாள் ஆட்ட முடிவின் போது 2 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுள்ளது.292 ஓட்டங்கள் இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலையிலுள்ளது.
இன்று போட்டியின் 3ஆவது நாளாகும்.