2015ம் ஆண்டு முதல் மூன்று வருட காலப்பகுதிக்குள் பகிடிவதையினால் ஆயிரத்து 989 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனிதாபிமானமற்ற சித்திரவதைகளினால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருகைத்தருவது பலவீனமான நிலையில் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2015 மற்றும் 2016ம் கல்வியாண்டில் பகிடிவதை காரணமாக ஆயிரத்து 352 மாணவர்களும், 2016 மற்றும் 2017ம் கல்வியாண்டில் 637 மாணவர்களும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர். உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு நடத்திய ஆய்வொன்றிலேயே இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக கட்டமைப்பில் பகிடிவதைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில் மாணவர்களுக்கும் பொறுப்பு காணப்படுவதாக உயர்கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.