fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 10:34

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். தடைப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று காலை வழமைக்கு திரும்பியது. ஸ்டெதன் தோட்டத்தில் பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதி நேற்று மாலை மூடப்பட்டது. தற்போது ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியில் கடும் பனிமூட்டத்துடனான மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க