fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2018 12:50

விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம்

ஊவா மற்றும் வடமேல் மாகாண விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒன்றிணைந்த நீர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமென குறித்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் அணைகள், விவசாய நீர்வழிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக மையங்கள், விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் பல இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் பசுமை பூங்காக்களை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று புத்தளம் மாவட்டத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்வதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் அடுத்த மாதமளவில் உத்தேச நடவடிக்கைகளை நூற்றுக்கு 30 வீதமளவில் நிறைவுசெய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள விவசாயிகளுக்கு திட்டத்தினூடாக பாரிய நன்மைகள் கிடைக்கப்பெறும். 2025ம் ஆண்டளவில் திட்டம் நிறைவுசெய்யப்படும். இதற்கென இரண்டாயிரம் மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2018 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33