பிரபல ஹொலிவூட் கிளாசிக் பாடகியான அரேத்தா ப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) காலமானார். சிறுவயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார். 1987-ம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் காரணமாக தனது இசைப்பயணத்தில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற இவர், நேற்று அவரது வீட்டில் காலமானார். அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பிரபலங்கள் பலரும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.