fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 16:12

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இயக்குனர் ஏ.எல்.விஜய், அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகை குறித்து ஏ.எல் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வேடத்தில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தெரிவு செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 16:12

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க