ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாமொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள கஸ்னி நகரை கைப்பற்றும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 100 இராணுவ வீரர்களில் 14 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதோடு 40 பேர் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டனர். எனினும் குறித்த நகரிலுள்ள இராணுவ முகாமை தலிபான்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாமை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவ வீரர்கள் பலி
படிக்க 0 நிமிடங்கள்