fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் வேலை நிறுத்தம் பற்றி அமைச்சர் மஹிந்த இப்படி கூறுகிறார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:49

ரயில் வேலை நிறுத்தம் பற்றி அமைச்சர் மஹிந்த இப்படி கூறுகிறார்

அண்மைகால வரலாற்றில் தொழிற்சங்கம் ஒன்று மேற்கொண்ட மிக அநீதியானதும் மிலேச்சதனமானதுமான வேலைநிறுத்தம் ரயில் வேலைநிறுத்தமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுமக்களை பலிக்கடாவாக்கி அரசியல் நோக்ககளை நிறைவேற்றுவதே இதுபோன்ற வேலைநிறுத்தங்களின் உள்நோக்கம் என பெலியத்த பகுதியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் ரயில் சாரதிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் இந்நாட்டு தொழிற்சங்கம் ஒன்று மேற்கொண்ட மிக நியாயம் அற்ற மிலேச்சதனமான ஒரு வேலைநிறுத்தம் ஆகும். காலையில் பயணிகளை கொழும்புக்கு அழைத்து வந்து அவர்களை நிர்கதிக்குள்ளாக்கினார்கள். அரச ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் இன்னோரன்ன பணிகளுக்கு கொழும்புக்கு வந்தவர்களை மீண்டும் வீடுகளுக்கு செல்ல விடாமல் இவர்கள் வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டார்கள். ரயில் சாரதியொருவர் வைத்தியர் ஒருவரை விட, பிரதேச செயலாளரை விட, நிர்வாக சேவை அதிகாரியை விட, கமநல சேவை ஆணையாளரை விட கூடுதலான சம்பளத்தை பெறுகின்றார். இவ்வாறானவர்களே இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டார்கள். இவர்கள் சுமார் 300 ரூபா அதிகரிப்பை கோரிய போதிலும் அவை இணைந்து வரும் போது ஆயிரக்கணக்கில் சம்பளம் அதிகரிக்கின்றது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இன்னும் 28 வகையான தொழில்சார் துறையினருக்கு இந்த சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டியேற்படும். அதுபற்றி ஓரிரு வாரங்களில் முடிவுகள் எடுக்கப்படுமென தீர்மானித்திருந்தோம். இங்கு வேறு எதுவும் இல்லை. அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு சூழ்ச்சியே இடம்பெற்றுள்ளது. சில அரசியல்வாதிகள் இந்த தொழிற்சங்க உறுப்பினர்களை சந்தித்து இந்த வேலைநிறுத்த்தை தொடருமாறு கோரியுள்ளனர். இதுபோன்ற கீழ் மட்;டத்திற்கு சென்ற அரசியல் வாதிகளை நாடு எதிர்பார்க்கவில்லை. மக்களை தூண்டி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக இருந்தால் அதுவொரு வங்குரோத்து அரசியல் ஆகும். அவ்வாறான அரசியலுக்கு நீண்ட காலம் செல்ல முடியாது. அது தற்காலிகமானதாகவே இருக்கும் அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க