fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் பாதுகாப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 12, 2018 10:23

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் பாதுகாப்பு

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
தற்பொழுது வருடாந்தம் 33 ஆயிரம் பேர் பல்வேறு பயிற்சி கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அடுத்த வருடம் முதல் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளது. பயிற்சி அதிகார சபையின் வழிகாட்டல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பான உதவி பணிப்பாளர் லலித் பிரியந்த தெரிவித்தார்.
 பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தொழில்வாய்பபை பெற்றுக்கொள்ள முடியும். தொழில்நுட்ப பயிற்சி கற்கை நெறிக்கு மேலதிகமாக வைத்தியதுறை சார்;ந்த பயிற்சி கற்கை நெறிகள் பலவும் இந்த அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகி;ன்றது.
தாதி வைத்திய இரசாயன மற்றும் மருத்துவம் தொடர்பான கற்கை நெறிகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் அனைவருக்கும் Nஏஞ சான்றிதழும் வழங்கப்படும். சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட விரும்புவோருக்கு வங்கி கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்;.
ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 12, 2018 10:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க