ஒருதொகை போதை மாத்திரைகளுடன் செட்டிக்குளம் பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட 70 ஆயிரம் போதை மாத்திரைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. செட்டிக்குளம் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இன்று அதிகாலை அவர்கள் கைதாகியுள்ளனர். 23 வயதான இளைஞரொருவரும், 20 வயதான யுவதியொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருதொகை போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்