ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் பேலியகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். அவரிடமிருந்து வேறு நபர்களின் 5 கடவுச்சீட்டுக்கள், 2 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 2 தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2018/06/arrest-6.png)
ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்